சுடச்சுட

  

  உ.பி.யில் கண்ணாடி தயாரிப்பு தொழிற்சாலையில் பயங்கர தீ: ஒருவர் பலி; 12 பேர் காயம்

  By DIN  |   Published on : 14th March 2017 01:05 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  உத்தரப்பிரதேசத்தில், கண்ணாடி தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். 12 பேர் காயமடைந்தனர்.

  உத்தரப்பிரதேச மாநிலம் பிரோசாபாத் ரசுல்பூர் பகுதியில் இயங்கி வரும் கண்ணாடி தயாரிப்பு தொழிற்சாலையில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இத்தொழிற்சாலையின் ஒரு பிரிவில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மற்ற பிரிவுகளுக்கும் தீ வேகமாக பரவத் தொடங்கியதால், தொழிலாளர்கள் அவசரமாக வெளியேற முயன்றனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்தவுடன் விரைந்த தீயணைப்பு படையினர், தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

  எனினும், தீயில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் காயமடைந்த 12 பேர் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்குப் பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையான நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை டெய்து வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai