சுடச்சுட

    

    ஏழுமலையான் கோயில் கோபுரங்களில் உள்ள செடிகளை அகற்றும் பணி தொடக்கம்

    By DIN  |   Published on : 14th March 2017 04:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோபுரங்கள் மேல் வளர்ந்துள்ள செடிகளை ரசாயனத்தை பயன்படுத்தி அகற்றும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தங்க கோபுரம், மகாதுவார கோபுரம் உள்ளிட்ட கோபுரங்களின் மேல் காக்கைகள் இடும் எச்சத்தால் செடி, கொடிகள் வளர்ந்து வருகின்றன. இவ்வாறு வளரும் செடிகளை தேவஸ்தானம் ஆண்டுக்கு ஒருமுறை மரம் அகற்றும் கருவிகளைப் பயன்படுத்தி அகற்றி வருகிறது.
    ஆனால் மீண்டும் அதே பகுதியில் செடிகள் முளைத்து வருகிறது. இதனால் கோபுரங்களின் கட்டமைப்பு பாதிக்கப்பட்டு விரிசல் ஏற்பட்டு அவை பாழடையும் அபாயம் உள்ளது. எனவே கோபுரங்களை பாதுகாக்க அதில் வளரும் மரங்களை முற்றிலும் அகற்ற தேவஸ்தானம் புதிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
    ""கிளாசைல்'' என்ற ரசாயனத்தை கோபுரங்கள் மேல் வளரும் மரங்களின் மேல் தெளித்தால் அவை வேர் வரை சென்று, மீண்டும் வளராமல் அவற்றை முற்றிலும் அழித்து விடும் தன்மை கொண்டது. எனவே இந்த ரசாயனத்தை பயன்படுத்தி திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான அனைத்துக் கோயில்களிலும் உள்ள கோபுரங்கள் மேல் வளரும் செடி, கொடிகளை அகற்ற தேவஸ்தானம் முடிவு செய்தது. முதன் முதலில் திருப்பதியில் உள்ள கோதண்டராம சுவாமி கோயிலில் இப்பணி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
    திருமலை, திருப்பதியில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் உள்ள அனைத்துக் கோயில்களிலும், இந்தப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் மூலம் கோபுரங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பணிகளை செய்ய வேண்டும் என தேவஸ்தானம் சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai