சுடச்சுட

  

  கச்சத்தீவை தாரை வார்க்க இந்திராவிடம் பணம் பெற்றவர் கருணாநிதி: சுப்பிரமணியன் சுவாமி குற்றச்சாட்டு

  By DIN  |   Published on : 14th March 2017 09:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sswamy1

  சென்னை: கச்சத்தீவை தாரை வார்க்க முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி பணம் அளித்தார் என பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டியுள்ளார்.

  சர்ச்சைக்குரிய கருத்துக்களை தன்னுடைய டுவிட்டர் பக்கத்திலும், செய்தியாளர் சந்திப்பிலும் கூறி வருவதை வழக்கமாக வைத்துள்ளார் சுப்பிரமணியன் சுவாமி.  அண்மையில் ஜல்லிக்கட்டு போரட்டத்தில் ஈடுபட்டவர்களை பொறுக்கிகள் என சுப்பிரமணியன் சுவாமி சாடியது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

  இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுப்பிரமணியன் சுவாமி,  கச்சத்தீவை தாரை வார்க்க கருணாநிதிக்கு இந்திராகாந்தி பணம் அளித்தார் என குற்றம் சாட்டியுள்ளார்.

  இலங்கை கடற்பகுதியில், தமிழக மீனவர்கள் 3 ஆண்டுகளுக்கு மீன்பிடிக்க, மத்திய அரசு ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai