சுடச்சுட

    

    குஜராத் மாநிலத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள பனாஸ்கந்தா மாவட்டத்தில் திங்கள்கிழமை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
    இதுதொடர்பாக காந்தி நகரில் உள்ள நிலநடுக்கவியல் ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
    பனாஸ்கந்தா மாவட்டம், சியா கிராமத்தை மையமாகக் கொண்டு, திங்கள்கிழமை மாலை 3.52 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.4 புள்ளிகளாக இது பதிவானது என்றார். பனாஸ்கந்தா மாவட்ட ஆட்சியர் ஜேனு தேவன் கூறுகையில், "நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த இடத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக அதிகாரிகள் குழு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால், உயிர்ச் சேதமோ, யாருக்கும் காயமோ, பொருள்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை' என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai