சுடச்சுட

  

  கோவா சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு 

  By DIN  |   Published on : 14th March 2017 12:15 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  manohar-parrikar

   

  புதுதில்லி: கோவாவில் பாஜக ஆட்சி அமைக்க அழைக்கப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ் தொடுத்த வழக்கில் கோவா சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  நடந்து முடிந்த சட்ட பேரவை தேர்தலில் கோவாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 40 இடங்களில் ஆட்சியமைக்க 21 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை. 17 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் தனித்த பெரிய கட்சியாக உருவெடுத்தது. ஆனால் இந்நிலையில் 13 இடங்களில் வென்ற பாஜகவானது இதர சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகள்உதவியுடன் ஆட்சி அமைக்க தேவையான 22 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து கோவா மாநில முதல்வராக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தேர்வு செய்யப்பட்டார். ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதத்தை அவர் ஆளுநரிடம் வழங்கினார். அவர் இன்று மாலை பதவியேற்கவிருக்கிறார்.

  ஆனால் தனித்த பெரிய கட்சியான தங்களை ஆட்சி அமைக்க அழைக்காமல் பாஜகவை அழைத்த ஆளுநரின் முடிவு தவறு என்று கோரி காங்கிரஸ் கட்சியானது உச்ச நீதிமன்றத்தில் நேற்று இரவு அவசர மனு ஒன்றை தாக்கல் செய்தது.அந்த மனுவானது இன்று தலைமை நீதிபதியான ஜே .எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

  மனுதாரரின் வாதத்தை கேட்ட தலைமை நீதிபதி கேஹர் யாருக்கு பெரும்பான்மை உள்ளது என்பதை  கண்டறிய கோவா சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டார். தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள  சட்டமன்ற உறுப்பினர்களில் மூத்த உறுப்பினர் ஒருவரை தாற்காலிக சபாநாயகராக நியமித்து இந்த நம்பிக்கை வாக்கெடுப்பைநடத்தலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.  

  இன்று மாலை மனோகர் பாரிக்கர் முதல்வராக பொறுப்பேற்க இருந்த நிலையில் இந்த உத்தரவு  பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai