சுடச்சுட

  

  சட்டப்படி உரிமை உள்ளது: பாஜக; ஜனநாயகப் படுகொலை: காங்கிரஸ்

  By DIN  |   Published on : 14th March 2017 02:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோவா, மணிப்பூர் மாநிலங்களில் ஆட்சியமைக்க உரிமை கோர தங்களுக்கு சட்டப்படி உரிமையும், போதிய எம்எல்ஏக்களின் ஆதரவும் இருப்பதாக பாஜக தெரிவித்துள்ளது.
  அதேநேரத்தில், பாஜகவின் நடவடிக்கை ஜனநாயக கொலை என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
  கோவா, மணிப்பூர் மாநில சட்டப் பேரவைகளுக்கு நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருமாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது. பாஜக 2-ஆவது பெரிய கட்சியாக உள்ளது.
  இந்நிலையில், கோவா அரசியலில் திடீர் திருப்பமாக அந்த மாநில ஆளுநர் மிருதுளா சின்ஹாவை பாஜக மூத்த தலைவர் மனோகர் பாரிக்கர் ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதையடுத்து, கோவா முதல்வராக பாரிக்கரை ஆளுநர் நியமித்தார். மேலும், 15 நாள்களுக்குள் சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார்.
  மணிப்பூரில் முதல்வர் இபோபி சிங் இன்னமும் ராஜிநாமா செய்யவில்லை. எனவே, அந்த மாநிலத்தில் புதிய அரசு அமைவதற்கு வசதியாக முதல்வர் இபோபி சிங் தனது பதவியை உடனடியாக ராஜிநாமா செய்ய வேண்டும் என்று ஆளுநர் நஜ்மா ஹெப்துல்லா கேட்டுக் கொண்டுள்ளார்.
  இந்நிலையில், தில்லியில் பாஜக செய்தித் தொடர்பாளர் ஜி.வி.எல். நரசிம்ம ராவ் தனியார் தொலைக்காட்சிக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:
  2 மாநிலங்களிலும் ஆட்சியமைக்க உரிமை கோர சட்ட அடிப்படையில் எங்களுக்கு உரிமை உள்ளது; பாஜகவுக்கு வாக்கு சதவீதம் அதிகம் உள்ளது. ஆட்சியமைக்க தேவையான எம்எல்ஏக்களின் ஆதரவும் உள்ளது.
  கோவாவில் காங்கிரûஸக் காட்டிலும் பாஜகவுக்கு கூடுதலாக 4 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. இதைக் காட்டிலும் ஆட்சியமைக்க வேறு என்ன வேண்டும்? என்றார்.
  இதனிடையே, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி செய்தியாளர்களிடம் பேசியபோது, பாஜகவின் நடவடிக்கையானது, வெளிப்படையாக நடைபெறும் ஜனநாயகப் படுகொலை என்று விமர்சித்தார். அவர் மேலும் கூறியதாவது:
  பாரிக்கர் தேர்தலில் போட்டியிடவில்லை. அப்படியிருக்கும்போது மக்களிடையே செல்வாக்குமிக்கவராக திகழ்கிறார் என்பது எப்படி தெரியும்? மணிப்பூரை எடுத்துக் கொள்ளுங்கள். காங்கிரஸ் கட்சிதான் அதிக இடங்களில் வென்றுள்ளது.
  அப்படியிருக்கும்போது காங்கிரஸ் கட்சியை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்திருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி மறுக்கும்பட்சத்தில்தான், 2-ஆவது பெரிய கட்சியாகத் திகழும் பாஜகவுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். மணிப்பூரில் சுயேச்சை எம்எல்ஏக்களை கடத்தும் செயலில் பாஜக ஈடுபட்டுள்ளது என்றார் சதுர்வேதி.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai