சுடச்சுட

  

  சத்தீஸ்கரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) வீரர்கள் 12 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து அனைத்து துணை ராணுவப் படைகளும் இந்த ஆண்டு ஹோலி கொண்டாட்டத்தை ரத்து செய்துவிட்டன.
  சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் நக்ஸல்கள் சனிக்கிழமை நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 12 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், ஹோலி பண்டிகை திங்கள்கிழமை கொண்டாடப்பட்டதையொட்டி சிஆர்பிஎஃப் சார்பில் ஓர் உத்தரவு வெளியிடப்பட்டது. அதில், சிஆர்பிஎஃப் படை சார்பில் இந்த ஆண்டு ஹோலி பண்டிகை கொண்டாட்டம் எதுவும் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டது.
  இதையடுத்து, பிற துணை ராணுவப் படைகளான எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்), இந்திய-திபெத் எல்லை பாதுகாப்புப் படை (ஐடிபிபி), எல்லை ஆயுதப் படை (எஸ்எஸ்பி), மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) உள்ளிட்ட துணை ராணுவப் படைகளும் ஹோலி கொண்டாட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்தன.
  தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினரின் சோகத்தை பகிர்ந்து கொள்ளும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. "சுக்மாவில் நிகழ்ந்த துயர சம்பவத்தால் இந்த ஆண்டு ஹோலி பண்டிகையை கொண்டாடப்போவதில்லை' என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் அறிவித்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai