சுடச்சுட

    

    தேர்தல் வெற்றியை மறைமுகமாக பறிக்கிறது பாஜக: ப.சிதம்பரம்

    By DIN  |   Published on : 14th March 2017 02:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    pchidambaram

    ""கோவா, மணிப்பூர் மாநிலங்களில் தேர்தல் வெற்றியை பாஜக மறைமுகமாகப் பறிக்க முயன்றுள்ளது'' என்று மத்திய முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
    இதுதொடர்பாக, டுவிட்டர் வலைதளத்தில் திங்கள்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:
    தேர்தலில் இரண்டாவது இடத்தைப் பிடித்த கட்சிக்கு ஆட்சியமைக்க எந்த உரிமையும் இல்லை. கோவா, மணிப்பூர் மாநிலங்களில் தேர்தல் வெற்றியை பாஜக மறைமுகமாகப் பறிக்க முயன்றுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
    கோவா, மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள், கடந்த 11-ஆம் தேதி வெளியாகின. இதில் கோவா, மணிப்பூர் ஆகிய இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கத் தேவையான இடங்களைப் பெறாதபோதிலும், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
    கோவாவில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் காங்கிரஸ் 17 இடங்களிலும், பாஜக 13 இடங்களிலும் வெற்றி பெற்றன. எனினும் சிறிய கட்சிகள், சுயேச்சைகள் உள்ளிட்டோரின் ஆதரவுடன் பாஜக ஆட்சியமைக்க உரிமை கோரியது. இதற்கு, ஆளுநரும் ஒப்புதல் அளிக்கவே மனோகர் பாரிக்கர் தலைமையில் அங்கு பாஜக ஆட்சி அமைக்கிறது.
    மணிப்பூரில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் காங்கிரஸ் 28 இடங்களிலும், பாஜக 21 இடங்களிலும் வெற்றி பெற்றன. எனினும், சிறிய கட்சிகளின் ஆதரவுடன் பாஜக அங்கு ஆட்சியமைக்கும் முனைப்பில் உள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai