சுடச்சுட

  

  நீதித் துறையின் மாண்பை கெடுக்க வேண்டாம்: நீதிபதி கர்ணனுக்கு ஜேத்மலானி கடிதம்

  By DIN  |   Published on : 14th March 2017 01:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ram-jethmalani

  நீதித் துறையின் மாண்பை கெடுக்கக் கூடாது என்று கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணனுக்கு மூத்த வழக்குரைஞர் ராம் ஜேத்மலானி கடிதம் எழுதியுள்ளார்.
  நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மார்ச் 31-ஆம் தேதிக்குள் நேரில் ஆஜராகாவிட்டால் கர்ணனை கைது செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே வாரண்ட் பிறப்பித்துள்ளது. ஆனால், "நீதிமன்றத்தில் ஆஜராக மாட்டேன்; எனக்கு வாரண்ட் பிறப்பித்தது சட்டவிரோதம்; தலித் சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால் தொடர்ந்து குறிவைக்கப்படுகிறேன்' என்று கர்ணன் தெரிவித்தார்.
  இந்நிலையில், அவருக்கு ராம் ஜேத்மலானி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஊழல் மலிந்துவிட்ட நமது நாட்டில் நீதித் துறை மட்டுமே மக்களுக்கு ஒரே பாதுகாப்பாக உள்ளது. எனவே, அதன் மாண்பைக் கெடுக்கும் வகையிலும், நீதித் துறையை பலவீனப்படுத்தும் வகையிலும் நடந்து கொள்ளக் கூடாது.
  ஒரு வழக்குரைஞராக என் வாழ்நாள் முழுவதும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக உழைத்துள்ளேன். அவர்கள் மீது எனக்கு அக்கறையும், கருணையும் உண்டு. ஆனால், நீங்கள் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் நலன்களுக்கு எதிராக செயல்படுகிறீர்கள் என்று அக்கடிதத்தில் ராம் ஜேத்மலானி குறிப்பிட்டுள்ளார். இந்திய நீதித் துறை வரலாற்றில் உயர் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக உச்ச நீதிமன்றம் கைது ஆணை பிறப்பித்தது இதுவே முதல்முறையாகும்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai