சுடச்சுட

    

    பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம்: ஜிதேந்திர சிங்

    By DIN  |   Published on : 14th March 2017 01:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    JitendraSingh

    பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கு மத்திய அரசு தகுந்த பதிலடி கொடுக்கும் என்று பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
    ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லையில் உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் படையினர் கடந்த சில நாள்களாக அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
    இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஜம்முவுக்கு திங்கள்கிழமை வந்த ஜிதேந்திர சிங்கிடம், பாகிஸ்தான் படையினரின் அத்துமீறல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஜிதேந்திர சிங் அளித்த பதில் வருமாறு: தொடர்ந்து நடந்து வரும் சம்பவங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அமைப்புகள் தனது கவனத்தில் எடுத்துக் கொள்ளும். பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கு மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தகுந்த பதிலடி கொடுக்கும் என்று மக்கள் நம்ப வேண்டும்.
    எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளும் சக்தி, இந்திய அரசுக்கும், பாதுகாப்புப் படைகளுக்கும் உள்ளது. வரும் நாள்களில் இந்தியா அளிக்கப் போகும் பதிலடியை நீங்கள் காணலாம் என்றார் ஜிதேந்திர சிங்.
    அப்போது அவரிடம், உரித் தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் சிறுவர்கள் 2 பேர், பாகிஸ்தான் அதிகாரிகளிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு சரியான பதிலை ஜிதேந்திர சிங் அளிக்க மறுத்து விட்டார்.
    அதுகுறித்து அவர் கூறுகையில், "சம்பந்தப்பட்ட அமைப்புகள்தான் அதுதொடர்பாக பதில் அளிக்க முடியும். இதுபோன்ற முக்கியப் பிரச்னைகள் தொடர்பான கேள்விக்கு என்னால் பதில் அளிக்க இயலாது' என்றார்.
    உரித் தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த 2 சிறுவர்களை தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கைது செய்திருந்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த தாக்குதலில் தொடர்பில்லை என்பது தெரிய வந்தது.
    இதையடுத்து இருவரையும் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் இந்தியா ஒப்படைத்து விட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai