சுடச்சுட

  

   பாஜகவில் இணைகிறார் எஸ்.எம்.கிருஷ்ணா: எடியூரப்பா தகவல்

  By DIN  |   Published on : 14th March 2017 01:16 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  smk

  மைசூரு: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா(87) பாஜகவில் இணைய உள்ளதாக கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

  காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, தில்லியில் நாளை நடைபெறும் (மார்ச்.15) பாஜக நிகழ்ச்சியில் இணைய உள்ளார் என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

  இடைத்தேர்தல் நடைபெற உள்ள நஞ்சங்குட், குண்ட்லுபேட் தொகுதியில் பிரச்சாரம் செய்துவிட்டு திரும்பிய எடியூரப்பா செய்தியாளர்களை சந்தித்த போது இதனை தெரிவித்தார்.

  எடியூரப்பா தெரிவித்தது குறித்து, கருத்து ஏதும் தெரிவிக்காத எஸ்.எம்.கிருஷ்ணா அந்த தகவலை மறுக்கவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  கடந்த ஜனவரி 29-ஆம் தேதி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். மாநிலத்தில் நிகழ்ந்த குழப்பம் காரணமாக கட்சியில் இருந்து விலகியதாக அவர் தெரிவித்திருந்தார்.

  கர்நாடகாவில் 1999 முதல் 2004 காங்கிரஸ் ஆட்சியின் போது, கிருஷ்ணா முதல்வராக இருந்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் 2012-இல் வெளியுறவுத் துறை அமைச்சராகவும், அதன் பின்னர் மகாராஷ்டிர மாநிலத்திற்கு ஆளுநராகவும் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai