சுடச்சுட

    
    manipur

    மணிப்பூர் தலைநகர் இம்பாலில், அந்த மாநில சட்டப் பேரவை பாஜக தலைவராக திங்கள்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்ட நாங்தோம்பம் பிரேன் சிங்குக்கு வாழ்த்து தெரிவிக்கும் பாஜக மூத்த தலைவர்கள் பியூஷ் கோயல் (மத்திய எரிசக்

    மணிப்பூர் மாநில சட்டப் பேரவை பாஜக தலைவராக நாங்தோம்பம் பிரேன் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    இதையடுத்து, அந்த மாநிலத்தில் ஆட்சியமைப்பதற்குப் போதுமான எம்எல்ஏக்களின் ஆதரவு பாஜகவுக்கு உள்ளதாகக் கூறப்படும் நிலையில், பிரேன் சிங் மணிப்பூரின் அடுத்த முதல்வராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    இதுகுறித்து பாஜக மூத்த தலைவரும், மத்திய எரிசக்தி - நிலக்கரித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது:
    மணிப்பூர் மாநில சட்டப் பேரவை பாஜக தலைவராக பிரேன் சிங்கைத் தேர்ந்தெடுத்துள்ளோம்.
    விரைவில், அந்த மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் உரிமையைக் கோருவோம் என்றார் அவர்.
    இந்தத் தேர்தலில், ஹீன்காங்க் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் பான்கீஜம் சரத்சந்திர சிங்கைத் தோற்கடித்து எம்எல்ஏ ஆகியுள்ள பிரேன் சிங் (56), கால்பந்து வீரராகவும், பத்திரிகையாளராகவும் இருந்து, அரசியலுக்கு வந்தவர்.
    தனது சொந்தத் தொகுதியான ஹீன்காங்கில், ஜனநாயகப் புரட்சிகர மக்கள் கட்சியின் சார்பில் 2002-ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், 2003-ஆம் ஆண்டு அமலாக்கத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
    முன்னதாக, மணிப்பூரில் புதிய அரசை ஏற்படுத்துவதற்கு வசதியாக, அந்த மாநில முதல்வர் ஒக்ராம் இபோபி சிங் ராஜிநாமா செய்யும்படி ஆளுநர் நஜ்மா ஹெப்துல்லா கேட்டுக் கொண்டார்.
    இதுகுறித்து ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் திங்கள்கிழமை தெரிவித்ததாவது:
    முதல்வர் இபோபி சிங், துணை முதல்வர் கெய்காம்காம், மாநில காங்கிரஸ் தலைவர் டி.என். ஹாவ்கிப் ஆகியோர், ஆளுநர் நஜ்மா ஹெப்துல்லாவை ஞாயிற்றுக்கிழமை இரவு சந்தித்தனர்.
    அப்போது, மணிப்பூரில் ஆட்சியமைக்க உரிமை கோரிய முதல்வர் இபோபி சிங், தங்கள் கட்சியைச் சேர்ந்த 28 எம்எல்ஏக்களின் பட்டியலை அளித்தார்.
    மேலும், தேசிய மக்கள் கட்சி (என்பிபி) எம்எல்ஏக்கள் 4 பேர் தங்களுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்த அவர், அவர்களது பட்டியலையும் அளித்தார்.
    எனினும், குறிப்பிட்ட அந்த 4 என்பிபி எம்எல்ஏக்களையும், அந்தக் கட்சித் தலைவரையும் நேரில் அழைத்து வருமாறு ஆளுநர் கூறினார்.
    மேலும், தற்போதைய முதல்வர் பதவியை விட்டு விலகினால்தான் அடுத்த அரசை அமைப்பதற்கான நடவடிக்கைகளைத் தொடங்க முடியும் என்பதால், முதல்வர் இபோபி சிங் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று ஆளுநர் வலியுறுத்தினார் என்று ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
    ஏற்கெனவே, மணிப்பூரில் 21 தொகுதிகளைக் கைப்பற்றிய பாஜக, என்பிபி எம்எல்ஏக்கள் தங்களுக்குத்தான் ஆதரவு அளிப்பதாகக் கூறியுள்ளது.
    மேலும், அந்த 4 என்பிபி எம்எல்ஏக்களையும் ஆளுநரிடம் நேரில் அழைத்துச் சென்று, ஆட்சியமைக்கவும் உரிமை கோரியது.
    அப்போது பாஜக, என்பிபி எம்எல்ஏக்களுடன், லோக் ஜனசக்தி, திரிணமூல் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த தலா ஓர் எம்எல்ஏவும், காங்கிரஸிலிருந்து விலகிய ஓர் எம்எல்ஏவும் உடன் சென்றனர்.
    மேலும், 4 எம்எல்ஏக்களைக் கொண்ட நாகா தேசிய முன்னணி (என்பிஎஃப்) கட்சியின் ஆதரவுக் கடிதத்தையும் ஆளுநரிடம் பாஜக சமர்ப்பித்தது.

    மொத்த தொகுதிகள்....60

    பாஜக 21
    நாகா மக்கள் முன்னணி 4
    லோக் ஜனசக்தி 1
    திரிணமூல் காங்கிரஸ் 1
    காங்கிரஸ் அதிருப்தி 1
    தேசிய மக்கள் கட்சி 4
    மொத்தம் 32
    காங்கிரஸ் 28 (-1)
    சுயேச்சை 1

    இபோபி ராஜிநாமா

    முதல்வர் இபோபி சிங் தனது பதவியை திங்கள்கிழமை இரவு (மார்ச் 13) ராஜிநாமா செய்தார்.
    புதிய அரசை ஏற்படுத்து வதற்கான நடைமுறையைத் தொடங்குவதற்காக பதவி விலகுவதாக அவர் கூறினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai