சுடச்சுட

  

  மாணவர் முத்துக்கிருஷ்ணன் மன உளைச்சலில் இருந்துள்ளார்: தில்லி காவல்துறை விளக்கம்

  By DIN  |   Published on : 14th March 2017 11:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  muthukirshnan


  புது தில்லி: மர்மமான முறையில் மரணம் அடைந்த ஜேஎன்யு மாணவர் முத்துக்கிருஷ்ணன் மன உளைச்சலில் இருந்ததாக தில்லி காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

  தில்லியில் இன்று முத்துக்கிருஷ்ணன் மரணம் குறித்து தில்லி காவல்துறை செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளது.

  அதாவது, முத்துக்கிருஷ்ணன் பெற்றோரிடம் இனிதான் விசாரணை நடத்தப்பட வேண்டும். அவருடன் அறையில் வசித்த நண்பர்கள் மற்றும் அவரது உடலை மீட்ட 3 நண்பர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

  முத்துக்கிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்ட அறையில் தற்கொலைக் குறிப்பு அல்லது கடிதம் எதுவும் கிடைக்கவில்லை. உயிரிழந்து கிடந்த அறை சீல் வைக்கப்பட்டுள்ளது.

  முத்துக்கிருஷ்ணன் உடல் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைப்பதற்காக காத்திருக்கிறோம் என்று விளக்கம் அளித்துள்ளது.

  மேலும், மாணவர் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில், அவரைப் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த மணவர் ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்துள்ளார். மாணவர் முத்துக்கிருஷ்ணன் மன உளைச்சலில் இருந்துள்ளார். உயிரிழப்பதற்கு முன்பாக மாணவர் முத்துக்கிருஷ்ணன் சந்தித்த நபர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம்.

  தமிழக மாணவர் முத்துக்கிருஷ்ணனின் செல்போன் அழைப்பில் பேசியவர்கள் குறித்தும், கடந்த 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை அவருடன் பேசியவர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்துள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai