சுடச்சுட

    

    முத்துகிருஷ்ணன் விவகாரம்: மக்களவையில் இன்று எழுப்ப அனுமதி

    By DIN  |   Published on : 14th March 2017 11:48 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தமிழக மாணவர் முத்துகிருஷ்ணன் மரணம் தொடர்பாக மக்களவையில் புதன்கிழமை (மார்ச் 15) பேச அனுமதி அளிப்பதாக மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் தெரிவித்தார்.
    இந்த விவகாரத்தை எழுப்ப மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனிடம் அவை ஒத்திவைப்பு நோட்டீûஸ அதிமுக குழுத் தலைவர் டாக்டர் பி. வேணுகோபால் அளித்திருந்தார். அதைக் கவனத்தில் கொள்ளுமாறு செவ்வாய்க்கிழமை அவை நடவடிக்கையின்போது பலமுறை அவர் சுமித்ரா மகாஜனிடம் கேட்டுக் கொண்டார்.
    இருப்பினும், வேணுகோபாலின் நோட்டீûஸ அனுமதிக்க மறுத்த சுமித்ரா மகாஜன், அந்த விவகாரத்தை புதன்கிழமை (மார்ச் 15) கேள்வி நேரத்துக்கு பிறகு எழுப்ப அனுமதிப்பதாகத் தெரிவித்தார்.
    இதனால், அதிருப்தியடைந்த வேணுகோபால், "அதிமுக குழு தலைவரான என்னை முதலில் பேச அனுமதிக்காமல், எனது கட்சியைச் சேர்ந்த வேறு உறுப்பினரை (பி.ஆர்.சுந்தரம்) சர்ச்சைக்குரிய விவகாரத்தை பேச மட்டும் ஏன் அனுமதிக்கிறீர்கள்?' என்று கூறினார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக நாமக்கல் தொகுதி அதிமுக உறுப்பினர் பி.ஆர். சுந்தரம் பிரச்னை எழுப்பினார்.
    வேணுகோபால் இந்த விவகாரத்தை எழுப்பிய போது, மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை, அன்வர் ராஜா உள்ளிட்டோர் நீங்கலாக வேறு எந்த உறுப்பினரும் அவைக்குள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai