சுடச்சுட

  

  வங்கிகளில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் நீக்கம்: ரிசர்வ் வங்கி

  By DIN  |   Published on : 14th March 2017 02:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  rbilogo

  ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையைத் தொடர்ந்து, வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களிலிருந்து பணம் எடுப்பதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அனைத்தும் திங்கள்கிழமை முதல் நீக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
  பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக கடந்த நவம்பர் 8-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்தியப் பொருளாதாரத்தில் 80 சதவீதம் அளவுக்கு வியாபித்திருந்த இந்த நோட்டுகள் ரத்து செய்யப்பட்டதால் நாட்டில் கடும் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது.
  புதிய நோட்டுகள் உடனடியாக புழக்கத்துக்கு வராததன் காரணமாக, வங்கிகளிலும், ஏடிஎம் மையங்களிலும் பணம் எடுப்பதற்கு மக்கள் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய நிலை உண்டானது. இந்நிலையில், அனைவருக்கும் பணம் கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்காக வங்கிகள், ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. வங்கிகளிலிருந்து நாளொன்றுக்கு ரூ.2 ஆயிரமும், வாரத்துக்கு ரூ.24 ஆயிரமும் மட்டுமே எடுக்க முடியும் என ரிசர்வ் வங்கி முதலில் அறிவித்தது. பின்னர், இந்தக் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வந்தன.
  இறுதியாக, ஏடிஎம் மையங்களிலிருந்து பணம் எடுப்பதற்கான கட்டுப்பாட்டை ரிசர்வ் வங்கி கடந்த மாதம் 1-ஆம் தேதி முற்றிலுமாக நீக்கியது. எனினும், வங்கிகளில் வாரத்துக்கு ரூ.24 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு மட்டும் தொடர்ந்தது. பின்னர், இந்த உச்ச வரம்பை ரூ.50 ஆயிரமாக ரிசர்வ் வங்கி அதிகரித்தது.
  அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கம்: இந்நிலையில், வங்கி மற்றும் ஏடிஎம் மையங்களிலிருந்து பணம் எடுப்பதற்கான அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி திங்கள்கிழமை அறிவித்தது. இந்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் ஆர். காந்தி வெளியிட்டார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai