சுடச்சுட

  

  விமானங்களில் பெரிய அளவு கைப்பைகளை எடுத்துச் செல்லத் தடை

  By DIN  |   Published on : 14th March 2017 01:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  HandBag

  விமானங்களில் பெரிய அளவு கைப்பைகளை பயணிகள் எடுத்துச் செல்வதற்குத் தடை விதிக்குமாறு விமான நிலைய நிர்வாகங்களுக்கு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) அறிவுறுத்தியுள்ளது.
  பாதுகாப்பு அம்சங்களைக் கருத்தில் கொண்டு டிஜிசிஏ வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
  பெரிய அளவு கைப்பைகளை பயணிகள் எடுத்துச் செல்வதால், அதிக எடையை அவர்கள் எடுத்துச் செல்லக் கூடும். இதனால், விமானப் பயணத்தின் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, விமானத்தில் இருக்கைக்கு கீழே உள்ள இடம் அல்லது இருக்கைக்கு மேலே உள்ள அலமாரி ஆகியவற்றுக்குள் அடங்கும் வகையில், பயணிகளின் கைப்பை இருக்க வேண்டியதை விமான நிலைய நிர்வாகம் உறுதிசெய்ய வேண்டும்.
  மேலும், விமானங்களில் அனுமதிக்கப்பட்டுள்ள எண்ணிக்கையை விட கூடுதலாகப் பயணிகள் ஏற்றிச் செல்லப்படவில்லை என்பதையும் விமான நிறுவனங்கள் உறுதிசெய்ய வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  பாதுகாப்பான விமான பயணத்தை உறுதிசெய்வதற்காக, ஓடுபாதையின் தரம், விமானத்தின் எடை, பயணிகளின் எண்ணிக்கை ஆகிய கட்டுப்பாடுகளை டிஜிசிஏ நிர்ணயித்துள்ளது.
  மேலும், ஓடுபாதையின் நீளம், காற்றின் அடர்த்தி, வேகம், அது வீசும் திசை, தட்பவெப்ப நிலை ஆகிய காரணிகளும் விமானங்கள் புறப்படும்போதும், தரையிறங்கும்போதும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அவற்றின் தரம் அடிக்கடி சோதிக்கப்படுகிறது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai