சுடச்சுட

    
    modi

    ஹோலி பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
    இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில், "வண்ணங்களின் பண்டிகையான ஹோலி பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பண்டிகையானது ஆனந்தத்தையும், நல்லிணக்கத்தையும் எங்கெங்கும் பரப்பட்டும்' என்று கூறியுள்ளார்.
    மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், சுட்டுரையில் (டுவிட்டர்) வெளியிட்ட பதிவில் "மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான ஹோலி வாழ்த்துகள்' என்று தெரிவித்துள்ளார். மற்றொரு மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு வெளியிட்ட செய்தியில் "ஹோலியின் வண்ணங்கள் அனைத்தும் மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும் எங்கும் பரப்பட்டும். அனைவருக்கும் ஹோலி வாழ்த்துகள்' என்று குறிப்பிட்டுள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai