சுடச்சுட

  

  திருமலையில் 100 ஏக்கர் பரப்பளவில் சந்தன மரங்கள் பயிரிடும் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக தேவஸ்தான செயல் அதிகாரி சாம்பசிவ ராவ் தெரிவித்தார்.
  இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: ஏழுமலையான் கைங்கரியத்துக்கு தேவைப்படும் சந்தனம் மற்றும் சிகப்பு சந்தனத்தை திருமலையில் பயிரிட தேவஸ்தானம் முடிவு செய்தது.
  அதனால் 2013-ஆம் ஆண்டில் திருமலையில் உள்ள பார்வேட்டு மண்டபம் பகுதியில் 12 ஏக்கரில் சந்தன மரக் கன்றுகளை நடவு செய்தது. தற்போது இதனை 100 ஏக்கர் பரப்பளவுக்கு தேவஸ்தானம் விரிவுபடுத்தி உள்ளது. இங்கு சந்தன மரங்கள், செம்மரங்கள், ரோஸ்வுட், 24 நட்சத்திரங்கள் மற்றும் 12 ராசிகளுக்கு உரிய மரக் கன்றுகள் நடப்பட்டு வேலி அமைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன.
  20 ஆண்டுகளுக்குப் பின் தேவஸ்தானத்தின் சந்தனத் தேவையை இதன் மூலம் நிறைவு செய்து கொள்ளமுடியும். சொட்டு நீர்ப் பாசன முறையில் சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீர் இங்கு பாசனத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. கோடைக்காலத்தை முன்னிட்டு பக்தர்கள் காலணி அணியாமல் அதிகம் நடமாடும் பகுதிகள் மற்றும் மாடவீதிகளில் குளிரூட்டும் (கூலண்ட்) பெயிண்ட்டுகள் அடிக்கப்பட்டு வருகிறது. திருமலையில் வெயிலில் செல்லும் பக்தர்கள் இளைப்பாற நிழல்பந்தல் ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai