Enable Javscript for better performance
2019ம் ஆண்டில் இந்தியர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள்? அமெரிக்க நிபுணர்கள் கணிப்பு- Dinamani

சுடச்சுட

    

    2019ம் ஆண்டில் இந்தியர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள்? அமெரிக்க நிபுணர்கள் கணிப்பு

    By DIN  |   Published on : 14th March 2017 02:29 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    votes


    வாஷிங்டன்: 2019ம் ஆண்டில் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மையான இந்தியர்களின் வாக்கு யாருக்கு என்பது குறித்து அமெரிக்க அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    அமெரிக்காவின் அரசியல் நிபுணர்களின் கணிப்பின்படி, இந்தியாவில் கடந்த 2014ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் வெளியான முடிவுகளில் மாற்றம் ஏற்படாது என்றும், 2019க்குப் பிறகும் மோடிதான் இந்தியாவில் ஆட்சி செலுத்துவார் என்றும் கூறுகிறார்கள்.

    2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் கிடைத்த முடிவுதான் தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தல்களில் எதிரொலித்துள்ளது என்று ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் பொலிடிகல் சயின்ஸ் மற்றும் சர்வதேச விவகாரங்கள் துறைக்கான துணைப் பேராசிரியர் ஆடம் ஜெக்பெல்ட் கூறியுள்ளார்.

    உபியில் பாஜக பெற்ற வெற்றி மிகப் பெரியது. இதற்கு முன்பைவிட, தற்போது வெற்றி பெற்றவர்கள் அதிக அளவு வாக்கு வித்தியாசத்தில் பெற்றி பெற்றுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

    மோடி, 2019ம் ஆண்டைய மக்களவைத் தேர்தலின் வெற்றியாளர் என்பதை, தற்போதைய தேர்தல்கள் மூலம் நிருபித்துவிட்டார் என்று மற்றொரு அரசியல் பார்வையாளர் சதானந்த் துமே கூறுகிறார். மோடிதான் மக்களவைத் தேர்தலின் வெற்றியாளர் என்று அவர் உறுதியாகக் கூறுகிறார்.

    இந்திய அரசியல் சூழலை கணித்துள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகம், 2019ம் ஆண்டில் மோடியே ஆட்சியமைப்பார் என்றும், குறைந்த பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சியமைக்கவும் வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

    ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு விதமான தேர்தல் பிரசார யுக்தியை பாஜக கையாள்கிறது. இதனை எதிர்க்கட்சிகள் செய்யத் தவறிவிட்டன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai