Enable Javscript for better performance
"இளைஞர்களைக் கவருவதில் காங்கிரஸூக்கு மாற்றுச் சிந்தனை அவசியம்'- Dinamani

சுடச்சுட

    

    "இளைஞர்களைக் கவருவதில் காங்கிரஸூக்கு மாற்றுச் சிந்தனை அவசியம்'

    By DIN  |   Published on : 15th March 2017 01:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இளைஞர்களைக் கவருவதில் காங்கிரஸூக்கு மாற்று சிந்தனை இருக்க வேண்டியது அவசியம் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் அனந்த் காட்கில் வலியுறுத்தியுள்ளார்.
    இதுகுறித்து மும்பையில் பிடிஐ செய்தியாளரிடம் அவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பதை மறுக்க முடியாது. ஆனால், காங்கிரஸூக்கு என்றுமே போராட்ட குணம் உண்டு. எனவே, இந்த தோல்வியிலிருந்து காங்கிரஸ் கட்டாயம் மீண்டு வரும்.
    தேர்தல் தோல்வி என்பது காங்கிரஸூக்குப் புதிதல்ல. 1969-71 மற்றும் 1977-78-ஆம் காலகட்டங்களில் மிக மோசமான தோல்வியை காங்கிரஸ் சந்தித்தது. அதேசமயத்தில், அதிலிருந்து மீண்டு வந்து புதிய சகாப்தத்தை கட்சி படைத்தது. இந்தத் தோல்வி குறித்து காங்கிரஸ் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இளைஞர்களைக் கவருவது, வேட்பாளர்களைத் தேர்வு செய்வது உள்ளிட்ட நடைமுறைகளை கட்சி மாற்றியமைக்க வேண்டும். இவற்றில் மாற்றுச் சிந்தனைகளை புகுத்த வேண்டியது அவசியமாகியுள்ளது.
    ஜாதி, மதங்களை அடிப்படையாகக் கொண்டு வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் நடைமுறையை காங்கிரஸ் கைவிட வேண்டும். அதற்குப் பதிலாக, அந்தந்த தொகுதிகளில் மக்கள் செல்வாக்கு மிக்கவர்களை தேர்வு செய்ய வேண்டும் என்றார் அனந்த் காட்கில்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai