சுடச்சுட

    

    உ.பி.,யின் முன்னாள் அமைச்சருக்கு 14 நாள் நீதிமன்ற காவல்  

    By லக்னௌ  |   Published on : 15th March 2017 03:16 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாலியல் பலாத்கார வழக்கில் உ.பி.,யின் முன்னாள் அமைச்சர் காயத்ரி பிரஜாபதியை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவரான காயத்ரி பிரஜாபதிக்கும், அவரது உதவியாளர்களுக்கும் எதிராக பாலியல் குற்றச்சாட்டு புகார் எழுந்தது. எனினும், அவர்களுக்கு எதிராக அந்த மாநில காவல் துறை வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் உச்ச நீதிமன்றத்தை அணுகி நியாயம் கோரினார்.

    இந்த விவகாரத்தை கவனத்தில் எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், வழக்குப் பதிவு செய்து விசாரிக்குமாறு உத்தரப் பிரதேச காவல் துறைக்கு உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து, காயத்ரி பிரஜாபதிக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் தலைமறைவானார்.

    காயத்ரி பிரஜாபதியின் உதவியாளர்கள் 3 பேர் ஏற்கெனவே கைதான நிலையில் இன்று லக்னௌவில் காயத்ரி பிரஜாபதி கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் உடனே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது காயத்ரி பிரஜாபதியை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai