சுடச்சுட

  

  எதிரி சொத்து சட்டத் திருத்த மசோதா: உரிய திருத்தங்களுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

  By DIN  |   Published on : 15th March 2017 01:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாடு சுதந்திரம் அடைந்த பிறகு ஏற்பட்ட போர்களின்போது பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுக்கு சென்றவர்கள் விட்டுச் சென்ற சொத்துகளை வாரிசுகள் உரிமை கொண்டாட முடியாத வகையில் சில கூடுதல் திருத்தங்களுடன் நாடாளுமன்றத்தில் எதிரி சொத்து சட்டத் திருந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
  எதிரி சொத்துகளை பராமரிக்கவும், பாதுகாக்கவும் கடந்த 1968-ஆம் ஆண்டு எதிரி சொத்து சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.
  இந்நிலையில், அந்த சொத்துகளுக்கு யாரும் உரிமை கோர முடியாத வகையில், சில திருத்தங்களுடன் கூடிய மசோதா கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது. அந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
  மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாமல் இருந்துவந்த அந்த மசோதா, கடந்த வாரம் உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியது.
  எனினும், இந்த மசோதாவில் சில திருத்தங்களை மேற்கொள்ளுமாறு மாநிலங்களவையில் தேர்வுக் குழு பரிந்துரைத்தது.
  அந்தத் திருத்தங்களுக்கு மக்களவையில் ஒப்புதல் பெற வேண்டியது அவசியம்.
  எனவே, உரிய திருத்தங்களுடன் மக்களவையில் செவ்வாய்க்கிழமை மீண்டும் அந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
  இதன்மூலம், எதிரி சொத்துகளை அவர்களது வாரிசுகள் இனி உரிமை கொண்டாட முடியாது.
  அமீர் முகமது கான் என்பவரின் வாரிசுகள் தங்களுக்கு உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் பூர்விக சொத்துகள் உள்ளதாகவும், அவற்றை தங்களுக்கு திருப்பி அளிக்க வேண்டும் என்றும் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
  இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து எதிரி சொத்துகளுக்கு வாரிசுகள் உரிமை கோர முடியாத வகையில் உரிய திருத்தங்களுடன் கூடிய மசோதாவை மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டுவந்தது.
  முன்னதாக, மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியபோது, "நாடு முழுவதும் பல கோடி ரூபாய் மதிப்புடைய எதிரி சொத்துகள் கண்டறியப்பட்டுள்ளன. இன்னும் எஞ்சியிருக்கும் எதிரி சொத்துகள் அனைத்தும் கண்டறியப்படும்' என்றார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai