Enable Javscript for better performance
காஷ்மீ என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை- Dinamani

சுடச்சுட

    

    காஷ்மீர் என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை  

    By குப்வாரா  |   Published on : 15th March 2017 01:41 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kashmir

    காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    காஷ்மீர் மாநிலம், குப்வாரா மாவட்டத்தில் உள்ள காலரூஸ் பகுதியில் வீடு ஒன்றில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து அந்தப் பகுதிக்கு பாதுகாப்புப் படையினர் விரைந்தனர்.

    இந்நிலையில் அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இதற்கு பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். நீண்ட நேரம் நீடித்த இந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். போலீஸ் ஒருவர் காயமடைந்தார்.

    மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என கருதுவதால் அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai