சுடச்சுட

    

    மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் ரூ.4 கோடி மதிப்பிலான செல்லாத பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
    கொல்கத்தாவின் போவானிபோர் பகுதியில் அசோக் சுர்னா என்பவருக்குச் சொந்தமான கட்டடத்தில் செல்லாத பழைய ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், அங்கு போலீஸார் சென்று சோதனை நடத்தினர். அப்போது ரூ.4.15 கோடி மதிப்பிலான செல்லாத ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
    இதேபோல், குஜராத் மாநிலம், சூரத்தில் உள்ள ராந்தேர் பகுதியில் சந்தேகப்படும்படி வந்த 2 வாகனங்களை போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது அந்த வாகனங்களில் ரூ.28.68 லட்சம் மதிப்பிலான செல்லாத ரூபாய் நோட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai