சுடச்சுட

  

  கோவா, மணிப்பூரில் பாஜக ஆட்சியமைக்க எதிர்ப்பு: மக்களவையில் காங்கிரஸ் வெளிநடப்பு

  By DIN  |   Published on : 15th March 2017 01:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோவா மற்றும் மணிப்பூரில் பாஜக ஆட்சியமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் மக்களவை அலுவல்களைப் புறக்கணித்து விட்டு வெளிநடப்பு செய்தனர்.
  ஹோலிப் பண்டிகை விடுமுறைக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை மக்களவை கூடியது. அவையில் கேள்வி நேரம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, கோவாவில் பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்த விவகாரம் குறித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் பேச முயன்றனர்.
  அதற்கு மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் அனுமதி மறுக்கவே, காங்கிரஸ் எம்.பி.க்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து முழக்கங்களை எழுப்பினர். தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களும் காங்கிரஸýக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர். இந்த விவகாரம் குறித்து பேச அனுமதி வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதனை சுமித்ரா மகாஜன் நிராகரித்தார். அப்போது பேசிய கார்கே, "மக்களவையில் இதைப் பற்றிப் பேச அனுமதி வழங்காவிட்டால், வேறு எங்கு பேச முடியும்?' என்றார்.
  இதன் பிறகு காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். சிறிது நேரம் கழித்து அவைக்கு வந்த அவர்கள் மீண்டும் இதே விவகாரத்தை எழுப்பினர். உடனடி கேள்வி நேரத்தின்போது இந்த விவகாரம் குறித்துப் பேசலாம் என்று சுமித்ரா மகாஜன் கூறினார். அதை ஒப்புக்கொள்ளாத காங்கிரஸ் எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து மீண்டும் அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai