சுடச்சுட

    

    சந்திரசேகரராவ் தங்க நகைகள் காணிக்கை: தெலங்கானா அரசுக்கு ஹைதராபாத் உயர் நீதிமன்றம் கேள்வி

    By DIN  |   Published on : 15th March 2017 02:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ரூ.5 கோடி மதிப்பிலான தங்க நகைகளை காணிக்கையாக செலுத்திய விவகாரம் குறித்து அந்த மாநில அரசிடம் ஹைதராபாத் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சந்திரசேகர ராவ் கடந்த மாதம் ரூ. 5 கோடி மதிப்பிலான தங்க நகைகளை காணிக்கைச் செலுத்தினார். இதேபோல், மேலும் சில கோயில்களுக்கும் அவர் நகைகள் உள்ளிட்டவற்றை காணிக்கைச் செலுத்தினார். அவரது இந்நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சித்தன. பொது மக்களின் வரிப்பணத்தை காணிக்கையாக சந்திரசேகரராவ் செலுத்துவதாக அக்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்நிலையில், ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் எழுத்தாளர் காஞ்சா இலையா என்பவர் வழக்குத் தொடுத்தார். அதில் மதசார்ப்பற்ற அரசானது, பொது மக்களின் வரிப்பணத்தில் இருந்து கோயிலுக்கு காணிக்கை
    செலுத்தக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
    இந்த மனு, ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி (பொறுப்பு) ரமேஷ் ரங்கநாதன் தலைமையிலான அமர்வு முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த மனு குறித்து 4 வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி, தெலங்கானா அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். இதேபோல், மாநில அறநிலையத்துறை ஆணையருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai