சுடச்சுட

    

    தானூர் கலவரம் தொடர்பாக கேரள சட்டப் பேரவையில் கூச்சல் குழப்பம்

    By DIN  |   Published on : 15th March 2017 01:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்துக்கு உள்பட்ட தானூர் நகரில் நிகழ்ந்த கலவரம் தொடர்பாக மாநில சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கூச்சல், குழப்பம் நிலவியது.
    தானூர் நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் தொண்டர்களிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீர் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல், பின்னர் வன்முறையாக வெடித்தது.
    இந்நிலையில், இந்த விவகாரம் கேரள சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை எதிரொலித்தது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த என். சம்ஷுதீன் இந்த விவகாரம் தொடர்பாக ஒத்திவைப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.
    இதற்கு, முதல்வர் பினராயி விஜயன் பதிலளித்துப் பேசியதாவது:
    தானூர் நகரில் நிகழ்ந்த கலவரம் தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் தொண்டர்கள் உள்ளிட்ட சுமார் 2,000 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    கலவரத்தின்போது, இரு தரப்பினரின் வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. கல்வீச்சினால் 12 காவலர்கள் காயமடைந்துள்ளனர். சிலருடைய அரசியல் சகிப்பின்மை காரணமாகவே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
    தற்போது, அங்கு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சுமார் 200 காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அங்கு சிறப்பு கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. தானூர் தொகுதியில், கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இடதுசாரி ஜனநாயக முன்னணியின் ஆதரவுடன் சுயேச்சை வேட்பாளர் வி.அப்துரஹிமான் வெற்றிபெற்றது முதலே அங்கு வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன என்றார் பினராயி விஜயன்.
    அப்போது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு எதிராக அப்துரஹிமான் சில சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தார். இதையடுத்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளிள் உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து அவைத் தலைவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனால், பெரும் கூச்சல், குழப்பம் நிலவியது. இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai