சுடச்சுட

    

    தேசிய நெடுஞ்சாலை மூடல்: ஜம்முவில் சிக்கிய 530 பயணிகள் விமானம் மூலம் மீட்பு

    By DIN  |   Published on : 15th March 2017 12:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பனிப்பொழிவு, பலத்த மழையால் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டதால், ஜம்முவில் சிக்கியிருந்த 530 பயணிகள் இந்திய விமானப் படை விமானங்கள் மூலம் செவ்வாய்க்கிழமை பத்திரமாக மீட்கப்பட்டனர்.
    ஜம்மு-காஷ்மீரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை, கடும்பனிப்பொழிவு காரணமாக ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜம்மு பேருந்து நிலையத்தில் 530 பயணிகள் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து, அவர்களை மீட்க விமானப்படை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் 17 மாநில அரசுப் பேருந்துகளில் உதம்பூரில் உள்ள இந்திய விமானப்படை தளத்துக்கு கொண்டுவரப்பட்டனர். அங்கிருந்து இரு விமானப்படை விமானங்கள் மூலம் ஸ்ரீநகருக்கு செவ்வாய்க்கிழமை அழைத்து வரப்பட்டனர். உதம்பூர்-ஸ்ரீநகர் இடையே மேலும் விமானங்களை இயக்க தயாராக இருப்பதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
    தொடர்ந்து பெய்து வரும் மழை, பனி காரணமாக ஜம்மு-ஸ்ரீநகர் இடையிலான 300 கி.மீ. தொலைவுள்ள தேசிய நெடுஞ்சாலை கடந்த 7 நாள்களாக மூடப்பட்டுள்ளது. அச்சாலையில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்படுவதால் வாகனங்களை அனுமதிக்கவில்லை என்று மாநில போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai