சுடச்சுட

  

  நக்ஸல் தாக்குதலில் 12 வீரர்கள் பலி: சுய ஆய்வு செய்ய வேண்டியது அவசியம்: ராஜ்நாத் சிங்

  By DIN  |   Published on : 15th March 2017 01:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  rajnathsingh

  சத்தீஸ்கரில் நக்ஸல் தாக்குதலில் 12 வீரர்கள் பலியான விவகாரம் தொடர்பாக, மக்களவையில் செவ்வாய்க்கிழமை விளக்கமளிக்கும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

  சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸல் தீவிரவாதிகளால் மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த 12 வீரர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக சுய ஆய்வு செய்ய வேண்டியது அவசியம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
  இதுதொடர்பாக, மக்களவையில் அவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
  சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள சுக்மா வனப்பகுதியில் நக்ஸல்கள் அண்மையில் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த 12 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
  கடந்த ஆண்டு பாதுகாப்புப் படையினரால், இடதுசாரி தீவிரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர். இதனால் விரக்தியடைந்த அவர்கள் பழிதீர்க்கும் விதமாகவே, காவலர்களை கொன்றுள்ளனர்.
  எனினும், இந்தச் சம்பவம் தொடர்பாக சுய ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகிறது. இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்தும்படி மாநில போலீஸாருக்கும், மத்திய ரிசர்வ் காவல் படையினருக்கும் உத்தரவிட்டுள்ளேன்.
  அண்மைக் காலங்களில் பல்வேறு மாநிலங்களில் இடதுசாரி தீவிரவாதம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. குறிப்பாக, சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த ஆண்டு 135 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், 779 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்; 1,198 தீவிரவாதிகள் சரணடைந்தனர். மேலும், அம்மாநிலத்தில் கடந்த 2015-இல் 466 வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. 2016-இல் இந்த எண்ணிக்கை 395-ஆக குறைந்துள்ளது. அதேசமயம், நக்ஸல் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2015-இல் பாதுகாப்புப் படையினர் 15 பேர் உயிரிழந்தனர். 2016-இல், இந்த எண்ணிக்கை 3-ஆக குறைந்துள்ளது.
  சுக்மா வனப்பகுதியில் நக்ஸல்களால் கொல்லப்பட்ட மத்திய ரிசர்வ் காவல் படை வீரர்களின் குடும்பத்தினருக்கு மத்திய அரசின் சார்பில் ரூ. 35 லட்சம் கருணைத்தொகையாக வழங்கப்படும்.
  மேலும் மத்திய ரிசர்வ் காவல் படை பேரிடர் நிதியிலிருந்து ரூ. 20 லட்சமும், மத்திய ரிசர்வ் காவல் படை நல நிதியிலிருந்து ரூ. 1 லட்சமும் வழங்கப்படும். மேலும், அவர்களுக்கு காப்பீட்டு இழப்புத் தொகையாக ரூ. 25 லட்சமும், மாநில அரசின் சார்பில் ரூ. 3 லட்சம் நிதியுதவியும் வழங்கப்படும் என்றார் ராஜ்நாத் சிங்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai