Enable Javscript for better performance
நேஷனல் ஜியோகிராபிக் தொலைக்காட்சியில் ஏழுமலையான் வைபவம்- Dinamani

சுடச்சுட

    

    நேஷனல் ஜியோகிராபிக் தொலைக்காட்சியில் ஏழுமலையான் வைபவம்

    By DIN  |   Published on : 15th March 2017 03:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உலக தொலைக்காட்சிகளில் ஒன்றான நேஷனல் ஜியோகிராபிக் தொலைக்காட்சியில் ஏழுமலையான் வைபவம் ஒளிபரப்பப்பட உள்ளது.
    திருமலை ஏழுமலையானின் பெருமைகள், தேவஸ்தானம் பக்தர்களுக்கு செய்து வரும் சேவைகள், அன்ன தானம், குடிநீர், வாடகை அறைகள், திருமலையின் இயற்கை வளம், 100 ஏக்கர் சந்தன மரங்கள் நடவு உள்ளிட்டவை குறித்து உலக மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக நேஷனல் ஜியோகிராபிக் தொலைக்காட்சி ஏழுமலையானின் வைபவத்தை வரும் மார்ச் 27-ஆம் தேதி இரவு 9 மணிக்கு ஒளிபரப்ப உள்ளது. 43 நிமிடங்கள் கொண்ட இந்த குறும்படம் 2 எபிசோடாக ஒளிபரப்பப்பட உள்ளது.
    இதற்காக கடந்த 6 மாதங்களுக்கு முன் அத்தொலைக்காட்சியைச் சேர்ந்த தயாரிப்பாளர், இயக்குநர், கேமராமேன் அடங்கிய 5 பேர் கொண்ட குழு திருமலையில் உள்ள அனைத்து இடங்களிலும் படப்பிடிப்பு நடத்தியது.
    சுமார் 12 நாள்கள் திருமலையில் தங்கியிருந்து இக்குழுவினர் திருமலையை பற்றிய அரிய தகவல்களை சேகரித்தனர். திருமலை குறித்த தவறான தகவல்களை வெளியிட்டு விடக்கூடாது என அவர்கள் தயாரித்த குறும்படத்தை தேவஸ்தான அதிகாரிகளுக்கு கடந்த மாதம் முன்னோட்டம் நடத்திக் காண்பித்தனர். இக்குறும்படத்தை வெளியிட அதிகாரிகள் அனுமதியளித்ததால் இந்த எபிசோட் ஒளிபரப்பப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai