Enable Javscript for better performance
ப.சிதம்பரம் சொத்துகள் மீது நடவடிக்கை: பிரதமருக்கு சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    ப.சிதம்பரம் சொத்துகள் மீது நடவடிக்கை: பிரதமருக்கு சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை

    By DIN  |   Published on : 15th March 2017 02:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் சொத்துகள் குறித்து வருமான வரித்துறை அளித்த அறிக்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்தார்.
    இதுகுறித்து சுப்பிரமணியன் சுவாமி கூறியதாவது: ப. சிதம்பரம் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் சொத்துகள் தொடர்பாக மத்திய நிதியமைச்சகத்திடம் வருமான வரித்துறை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அறிக்கை தாக்கல் செய்தது. அந்த விவகாரத்தில் மேல் நடவடிக்கை எடுப்பதற்காக மத்திய அரசின் அனுமதியை வருமான வரித்துறை கேட்டுள்ளது.
    அதன்படி, ப. சிதம்பரம், அவரது குடும்ப உறுப்பினர்கள் சொத்துகள் தொடர்பாக வருமான வரித்துறை தாக்கல் செய்திருக்கும் அறிக்கை மீது பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் சுப்பிரமணியன் சுவாமி.
    முன்னதாக, ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு வெளிநாட்டு வங்கிகளில் ஏராளமான கணக்குகள் இருப்பதாக சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டியிருந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai