சுடச்சுட

    

    பத்ராசலத்தில் சீதா கல்யாண உற்சவம்: இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்

    By DIN  |   Published on : 15th March 2017 03:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பத்ராசலத்தில் உள்ள சீதா சமேத ராமசந்திர சுவாமி கோயிலில் நடைபெறும் கல்யாண உற்சவத்துக்கான டிக்கெட்டுகளை இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    தெலங்கானா மாவட்டம், பத்ராசலத்தில் உள்ள சீதா சமேத ராமசந்திர சுவாமி கோயிலில் ஏப்ரல் 5-ஆம் தேதி ஸ்ரீராம நவமி, 6-ஆம் தேதி ராமர் பட்டாபிஷேக உற்சவத்துக்கான டிக்கெட்டுகள் அக்கோயில் இணையதளத்தில் திங்கள்கிழமை முதல் வைக்கப்பட்டுள்ளது.
    விருப்பம் உள்ள பக்தர்கள் இந்த டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து, உற்சவத்தில் பங்கேற்று சீதா ராமரை தரிசிக்கலாம் என கோயில் நிர்வாகம் தெரிவித்தது.
    சீதா, ராமர் கல்யாண உற்சவத்தில் பங்கேற்க விரும்பும் பக்தர்களுக்கு ரூ. 5 ஆயிரம், ரூ. 2 ஆயிரம், ரூ. 1,116, ரூ. 500, ரூ. 200, ரூ. 100 உள்ளிட்ட கட்டணங்களில் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. ராமர் பட்டாபிஷேகத்தில் பங்கேற்க விரும்பும் பக்தர்களுக்கு ரூ. 250, ரூ. 100 கட்டணங்களில் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. இதை பக்தர்கள் www.badrachalamonline.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 08743-232428 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என்று கோயில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai