Enable Javscript for better performance
பாஜகவின் வெற்றிக்கு மோடியின் செல்வாக்கு காரணமல்ல: இந்திய கம்யூனிஸ்ட்- Dinamani

சுடச்சுட

    

    பாஜகவின் வெற்றிக்கு மோடியின் செல்வாக்கு காரணமல்ல: இந்திய கம்யூனிஸ்ட்

    By DIN  |   Published on : 15th March 2017 01:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளதற்கு மோடியின் செல்வாக்கு காரணமல்ல. அந்தந்த மாநில அரசு மீது மக்களுக்கு ஏற்பட்ட அதிருப்திதான் காரணம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.
    ஹைதராபாதில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு செவ்வாய்க்கிழமை பேட்டியளித்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் எஸ்.சுதாகர் ரெட்டி கூறியதாவது:
    உத்தரப் பிரதேசத் தேர்தலில் பாஜகவின் வெற்றியால் மோடி செல்வாக்குமிக்க தலைவராக உருவெடுத்துள்ளார் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. பஞ்சாபில் அவரது செல்வாக்கு என்ன ஆனது? அங்கு பாஜக கூட்டணி மிகமோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது. அதுமட்டுமல்லாது கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களிலும் பாஜகவுக்கு தோல்விதான் கிடைத்துள்ளது. அங்கு மோடியின் மாயாஜாலம் நிகழாதது ஏன்?
    மோடிக்கு உண்மையிலேயே செல்வாக்கு இருந்தது ஏன்றால் உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 45 நாள்கள் அவர் பிரசாரம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படக் காரணம் என்ன? நமது நாட்டில் இதுவரை எந்த பிரதமரும் தனது பணிகளைக் கவனிக்காமல், ஒன்றரை மாத காலம் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டது இல்லை.
    5 மாநிலத் தேர்தலிலும் ஆளும் கட்சிக்கு எதிரான மக்களின் மனநிலைதான் வெளிப்பட்டுள்ளது என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai