சுடச்சுட

  
  arun-jaitley

  கூடுதல் பொறுப்பாக பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவியை செவ்வாய்க்கிழமை ஏற்றுக் கொண்ட பிறகு, அத்துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடிய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி.

  மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, கூடுதல் பொறுப்பாக பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவியை செவ்வாய்க்கிழமை ஏற்றுக் கொண்டார்.
  பாதுகாப்புத் துறை அமைச்சராக பதவி வகித்துவந்த மனோகர் பாரிக்கர், கோவா மாநிலத்தின் முதல்வரானதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுரையின்பேரில், அந்தத் துறை கூடுதல் பொறுப்பாக ஜேட்லியிடம் ஒப்படைக்கப்பட்டது.
  பாதுகாப்புத் துறை அமைச்சராக பாரிக்கர் பதவியேற்பதற்கு முன்பு, கடந்த 2014-ஆம் ஆண்டு மே 26-ஆம் தேதி முதல், நவம்பர் 9-ஆம் தேதி வரை அருண் ஜேட்லிதான் கூடுதல் பொறுப்பாக அந்தத் துறையை கவனித்து வந்தார்.
  எனவே, அவருக்கு இரண்டாவது முறையாக இரண்டு அமைச்சகங்களை நிர்வகிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
  பாதுகாப்புத் துறை அமைச்சராக பாரிக்கர் பதவி வகித்தபோது, பல்வேறு நாடுகளிடம் இருந்து ஆயுத தளவாடங்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், முந்தைய அரசுகளால் முன்னெடுக்கப்படாமல் முடங்கியிருந்த பல்வேறு பாதுகாப்புத் திட்டங்களை செயல்படுத்தவும் அவரது தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
  பாதுகாப்பு ஒப்பந்தங்களில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும் நோக்கில் புதிய பாதுகாப்புக் கொள்கையை பாரிக்கர் கொண்டு வந்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai