சுடச்சுட

  

  கோவா முதல்வராக பதவியேற்றுள்ள பாஜக மூத்த தலைவர் மனோகர் பாரிக்கருக்கு மேலும் ஒரு சுயேச்சை எம்எல்ஏ ஆதரவு தெரிவித்துள்ளார்.
  கோவா முதல்வராக பதவியேற்ற பிறகு, பனாஜியில் பாரிக்கர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், "மேலும் ஒரு சுயேச்சை எம்எல்ஏ, எனது தலைமையிலான அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். கோவாவில் ஆட்சியமைப்பதற்கு தேவையான மெஜாரிட்டி எம்எல்ஏக்கள் பாஜகவிடம் உண்மையில் உள்ளதா? என்று கடந்த 2 நாள்களாக பரவலாக பேசப்பட்டு வந்தது. தற்போது பாருங்கள், எங்களுக்கு 22 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது' என்றார்.
  கோவா ஆளுநரை சந்தித்து பாரிக்கர் ஆட்சியமைக்க உரிமை கோரியபோது 21 எம்எல்ஏக்களின் பட்டியலை அளித்தார். அதாவது, பாஜக 13, மகாராஷ்ரவாதி கோமந்தக் கட்சி 3, கோவா ஃபார்வர்டு கட்சி 3, சுயேச்சை எம்எல்ஏக்கள் 2 பேரின் ஆதரவு கடிதத்தை அளித்திருந்தார்.
  கோவாவில் ஆட்சியமைக்க 21 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவையாகும். ஆனால், பாஜகவுக்கு தற்போது 22 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. இதனால், சட்டப் பேரவையில் நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக தலைமையிலான அரசு வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai