சுடச்சுட

    

    "மகாராஷ்டிர கூட்டணி அரசிலிருந்து சிவசேனை விலக வேண்டும்'

    By DIN  |   Published on : 15th March 2017 12:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மகாராஷ்டிரத்தில் பாஜக கூட்டணி அரசிலிருந்து சிவசேனை விலக வேண்டும் என்று அம்மாநில சட்ட மேலவையின் எதிர்க்கட்சித் தலைவரும், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவருமான தனஞ்சய் முண்டே வலியுறுத்தியுள்ளார்.
    மகாராஷ்டிர சட்டப் பேரவை மன்றும் மேலவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர்கள் அவை நடவடிக்கைகளை முடக்கி வருகின்றனர். இதனிடையே, பாஜக கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் சிவசேனை கட்சியின் உறுப்பினர்களும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் சேர்ந்து விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி முழக்கங்களை எழுப்பினர்.
    இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக, தனஞ்சய் முண்டே டுவிட்டர் வலைதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:
    பாஜக அரசில் அங்கம் வகித்தவாறே, விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்யக் கோரி சிவசேனை உறுப்பினர்கள் ஆர்ப்பரிக்கின்றனர். இந்த இரட்டை நிலைப்பாட்டை என்னவென்று சொல்வது?
    விவசாயக் கடன் தள்ளுபடி விவகாரம் தொடர்பாக, மாநில அரசு பணியும்வரை கடுமையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என சிவசேனை உறுப்பினர்களுக்கு அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே அறிவுறுத்தியுள்ளார். இது, உண்மையில் கேலிக்கூத்தாகும்.
    இந்த விவகாரத்தில் கடுமையான நிலைப்பாட்டை மாத்திரம் மேற்கொள்ளாமல், பாஜக கூட்டணி அரசிலிருந்து சிவசேனை விலக வேண்டும் என்றார் தனஞ்சய் முண்டே.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai