சுடச்சுட

    

    ம.பி. இடைத் தேர்தலில் வாக்குச்சீட்டு முறை: காங்கிரஸ் கோரிக்கை

    By DIN  |   Published on : 15th March 2017 01:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    arunyadav

    மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டப் பேரவை இடைத் தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
    இதுதொடர்பாக போபாலில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அருண் யாதவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
    வாக்காளர்கள் மனதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது தீவிர சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன. ஆதலால், மத்தியப் பிரதேச மாநிலம், அடேர், பாந்தவ்கர் ஆகிய பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும்.
    உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் எந்த பொத்தானை அழுத்தினாலும், பாஜகவுக்கு வாக்குகள் விழும் வகையில் மோசடி நடந்திருப்பதாக பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார். இந்த சந்தேகம் எனக்கும் இருக்கிறது. மத்தியப் பிரதேசத்திலும், மத்தியிலும் பாஜகதான் ஆட்சியிலிருக்கிறது. எனவே, இடைத் தேர்தலில் பாஜக உத்தரப் பிரதேசத்தில் செய்ததைப் போல செய்யலாம். இடைத் தேர்தல் நடைபெறவுள்ள 2 தொகுதிகளும் காங்கிரஸýக்கு செல்வாக்கு உள்ளவையாகும். ஆதலால், இரண்டு தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெறும்.
    5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் முடிவால் காங்கிரஸ் கட்சி ஏமாற்றமடையவில்லை. ஏனெனில், 5இல் 3 மாநிலங்களில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. கோவா, மணிப்பூரில் தனிப்பெரும் கட்சியாக இருந்தபோதும், காங்கிரûஸ ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்கவில்லை. இது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது ஆகும் என்றார் அருண் யாதவ்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai