சுடச்சுட

  
  RAJNATH2

  பண பலத்தைப் பயன்படுத்தி கோவா, மணிப்பூர் மாநிலங்களில் ஆட்சி அதிகாரத்தை பாஜக பறித்துள்ளது என்ற ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மறுத்துள்ளார்.
  இதுதொடர்பாக, நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் அவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
  காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. கோவா சட்டப் பேரவையில், மனோகர் பாரிக்கர் தனது பெரும்பான்மையை நிரூபிப்பார் என்றார் ராஜ்நாத் சிங்.
  முன்னதாக, ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசியபோது, உண்மையில் கோவா, மணிப்பூர் மாநிலங்களில் காங்கிரஸ் தான் வெற்றி பெற்றது. எனினும், ஜனநாயகத்தைக் குறைவாக மதிப்பிடும் பாஜக பண பலத்தின் மூலமாக அந்த மாநிலங்களில் ஆட்சி அதிகாரத்தைப் பறித்துள்ளது என்றார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai