சுடச்சுட

    

    "ஸ்டென்ட்' சாதனங்களுக்குத் தட்டுப்பாடு இல்லை: மத்திய அரசு விளக்கம்

    By DIN  |   Published on : 15th March 2017 08:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ரத்தக் குழாய்களில் பொருத்தப்படும் "ஸ்டென்ட்' எனப்படும் குழாய் வடிவிலான மருத்துவ சாதனத்துக்கு சந்தையில் தட்டுப்பாடு நிலவவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    இதயம் மற்றும் சிறுநீரக நோயால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களின் ரத்தக் குழாய்களில் பொருத்தப்படும் "ஸ்டென்ட்' சாதனத்தின் விலையை அதிரடியாகக் குறைத்து மத்திய அரசு அண்மையில் உத்தர
    விட்டது.
    சந்தையில் ரூ.45,100-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த "பேர் மெட்டல் ஸ்டென்ட்' சாதனத்தின் விலை ரூ.7,260-ஆகவும், "டிரக் எல்யூட்டிங் ஸ்டென்ட்' சாதனத்தின் விலை ரூ.1.21 லட்சத்திலிருந்து ரூ.29,600 ஆகவும் குறைக்கப்பட்டது.
    இதையடுத்து, அவற்றைத் தயாரிக்கும் உற்பத்தியாளர்கள் வேண்டுமென்றே சந்தையில் செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தலாம் என்று விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், இதுதொடர்பாக மக்களவையில் செவ்வாய்க்கிழமை எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை இணையமைச்சர் மன்சுக் மாண்டவியா பதிலளித்துப் பேசியதாவது:
    "ஸ்டென்ட்' சாதனங்களுக்கு சந்தையில் தட்டுப்பாடு நிலவுவதாக இதுவரை எந்தப் புகாரும் வரவில்லை. அந்தச் சாதனங்களின் விநியோகம் குறித்து நேரடியாக அரசு கண்காணித்து வருகிறது. மாநில மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கும் இதுதொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்றார் அவர்.
    பால் உற்பத்தியில் முன்னணி: இதனிடையே, உலக அளவில் பால் உற்பத்தியில் இந்தியா முன்னணியில் இருப்பதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதாமோகன் சிங் தெரிவித்துள்ளார்.
    பால், இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தி வளர்ச்சியடைந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். மக்களவையில் இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.
    நிகழ் நிதியாண்டில் இதுவரை சுமார் 10.5 கோடி டன் பாலும், 46 லட்சம் டன் இறைச்சியும், 5,500 கோடி முட்டைகளும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக அப்போது ராதாமோகன் சிங் தெரிவித்தார்.
    சுற்றுலாப் பயணிகளால் சுகாதாரக் கேடு: ஜம்மு - காஷ்மீர், ஹிமாசலப் பிரதேசம் உள்ளிட்ட இமயமலையை ஒட்டியுள்ள மாநிலங்களுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் குப்பைகளை பல்வேறு இடங்களில் வீசியெறிவதால், அங்கு சுற்றுச்சூழல் சீர்கெடுகிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்தபோது மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில்குமார் தவே, இவ்வாறு தெரிவித்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai