சுடச்சுட

    
    sureshprabhu1

    வர்த்தகத்தை அதிகரிப்பதற்கும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் அண்டை நாடுகளுடன் ரயில் போக்குவரத்து தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.
    ஐ.நா.வின் ஆசிய, பசிபிக் பொருளாதார மற்றும் சமூக ஆணையம் தில்லியில் ’ஆசிய கண்டத்தில் ரயில்வே இணைப்பு' என்ற தலைப்பில் 2 நாள் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
    இந்த மாநாடு புதன்கிழமை தொடங்கியது. அதில் பங்கேற்று அமைச்சர் சுரேஷ் பிரபு பேசியதாவது: எதிர்காலத்தில் உலகிலேயே ஆசிய கண்டம்தான் வளர்ச்சியின் மையமாக திகழப் போகிறது. கண்டங்களிலேயே மிகப் பெரியதாக ஆசியா திகழ்கிறது.
    நேபாளத் தலைநகர் காத்மாண்டு நகரில் இருந்து தில்லி மற்றும் கொல்கத்தாவுக்கு ரயில்வே பாதை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆசியாவின் தெற்கு மற்றும் தென்மேற்கு பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் ரயில் போக்குவரத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு இந்தியா மிகுந்த முக்கியத்துவம் அளிக்கும்.
    எனினும், இதற்கு சம்பந்தப்பட்ட நாடுகளுடன் அரசியல் ரீதியிலான புரிந்துணர்வு ஏற்பட வேண்டியது தேவையான ஒன்று.
    வங்கதேசத் தலைநகர் டாக்காவுடன் இந்தியா ரயில்வே தொடர்பை ஏற்கெனவே ஏற்படுத்திக் கொண்டுள்ளது. இதேபோல், நேபாளம், பூடான், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய அண்டை நாடுகளுடன் ரயில் போக்குவரத்தை ஏற்படுத்திக் கொள்ள இந்தியா முக்கியத்துவம் அளிக்கும் என்றார் சுரேஷ் பிரபு.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai