சுடச்சுட

  

  ஆந்திர மாநில பட்ஜெட் தாக்கல்: கல்வி, ஊரக மேம்பாட்டுக்கு அதிக நிதி

  By DIN  |   Published on : 16th March 2017 12:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  2017-18ஆம் நிதியாண்டுக்கான ஆந்திர மாநில பட்ஜெட் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இதில், கல்வி, ஊரக மேம்பாட்டுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  ஆந்திரப் பேரவையில் ரூ.1.56 லட்சம் கோடிக்கான பட்ஜெட்டை, நிதியமைச்சர் யானமலா ராமகிருஷ்ணுடு புதன்கிழமை தாக்கல் செய்து பேசியதாவது:
  பட்ஜெட்டில் பொதுக் கல்வித் துறைக்கு ரூ.20,384 கோடி நிதியும், தொழில்நுட்ப கல்வித் துறைக்கு ரூ.765 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஊரக மேம்பாட்டுக்கு ரூ.19,565 கோடியும், நீர்ப்பாசனம் மற்றும் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ரூ.12,770 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
  சமூக நலத் திட்டங்களுக்கு ரூ.11,361 கோடி, சுகாதாரத் துறைக்கு ரூ.7,020 கோடி, விவசாயம் மற்றும் அதுசார்ந்த துறைகளுக்கு ரூ.9,090 கோடி, வேலைவாய்ப்பில்லா இளைஞர்களுக்கு உதவும் திட்டத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  மாநிலத் தலைநகரை ஹைதராபாதில் இருந்து அமராவதிக்கு மாற்றும் நடவடிக்கையும், உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையும் 2016-17-ஆம் ஆண்டில் மாநில அரசின் பொருளாதார நிலையில் கடும் நெருக்கடியை ஏற்படுத்தின. இதேபோல, வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி அமலாகவிருப்பதும், மாநில நிதி ஆதாரங்களில் குறைந்தகாலக் கட்டத்துக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
  பட்ஜெட்டில் திட்டம்சார்ந்த, திட்டம்சாராத செலவுகள் என்று வகைப்படுத்தப்படும் பழைய முறைக்கு மாற்றாக, வருவாய்-மூலதனச் செலவுகள் என வகைப்படுத்தும் முறையை கையாண்டுள்ளோம். இது, நிதிக் கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க சீர்திருத்தமாகும். 2017-18ஆம் ஆண்டில் மாநில அரசின் நிதிப் பற்றாக்குறை ரூ.23,054 கோடியாக இருக்கும் மதிப்பிடப்பட்டுள்ளது.
  அனைத்து துறைகளிலும் பெண்களை முன்னேற்றுவதற்கு, மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. தற்போதைய பட்ஜெட்டின் அனைத்து நிலைகளிலும் பெண்களின் முன்னேற்றம், பாலின சமத்துவம் ஆகியவை கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன என்றார் அவர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai