சுடச்சுட

  

  உச்ச நீதிமன்ற உத்தரவு எதிரொலி: தில்லி நெடுஞ்சாலைகளில் 46 மதுபானக் கடைகள் மூடப்படுகின்றன

  By புதுதில்லி  |   Published on : 16th March 2017 07:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தில்லியில் உள்ள நெடுஞ்சாலைகளில் 500 மீ. தொலைவில் அமைந்திருக்கும் 46 மதுபானக் கடைகள் வரும் 31-ஆம் தேதி முதல் மூடப்படும் என்று தில்லி அரசு தெரிவித்துள்ளது.

  இந்தியாவில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீ. தொலைவுக்கு உள்ளாக இருக்கும் மதுபானக் கடைகளை மூடுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள உத்தரவின் அடிப்படையில் தில்லி அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

  இதுகுறித்து, தில்லி அரசு உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
  நெடுஞ்சாலைகளில் அமைந்திருக்கும் மதுபானக் கடைகளை அகற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் 15-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது. இதையடுத்து, தில்லி அரசின் கலால் துறையினர் மேற்கொண்ட ஆய்வில் தில்லியில் இருக்கும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீ. தொலைவுக்குள்ளாக 46 மதுபானக் கடைகள் அமைந்துள்ளது கண்டறியப்பட்டது. இதையடுத்து, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு இணங்கும் வகையில், வரும் 31-ஆம் தேதி முதல் அந்த 46 மதுபானக் கடைகளும் இயங்காது என்று அந்த உயரதிகாரி கூறினார்.

  இதனிடையே, நெடுஞ்சாலைகளின் அருகில் அமைந்திருக்கும் மதுபானக் கடைகளை மூடுமாறு பிறப்பித்துள்ள உத்தரவை மேலும் தெளிவுபடுத்துமாறு கோரி, தில்லி அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

  நெடுஞ்சாலைகளில் அமைந்திருக்கும் மதுபானக் கடைகளால் சாலைகளில் நிகழும் விபத்துக்கள், அதன் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து கவலை தெரிவித்த உச்ச நீதிமன்றம், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் பார்வையில் படும்படியாகவோ, எளிதாக அணுகும் வகையிலோ மதுபானக் கடைகள் இருக்கக் கூடாது என்று உத்தரவிட்டது.

  அத்துடன், நெடுஞ்சாலைகளின் வெளிப்புற எல்லை அல்லது இணைப்புச் சாலைகளில் இருந்து 500 மீ. தொலைவுக்கு அப்பாலாகவே மதுபானக் கடைகள் இயங்க வேண்டும் என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai