சுடச்சுட

    

    உ.பி.யில் குளிர்பதன கிடங்கில் வெடி விபத்து: 5 தொழிலாளர்கள் பலி

    By DIN  |   Published on : 16th March 2017 01:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    fire

    உத்தரப் பிரதேசம் கான்பூரில் எரிவாயு கசிவினால் நேரிட்ட வெடி விபத்தைத் தொடர்ந்து இடிந்து கிடக்கும் குளிர் பதன கிடங்கை பார்வையிட்டு விசாரணை நடத்தும் போலீஸார்.

    உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூர் அருகே குளிர்பதன சேமிப்பு கிடங்கு ஒன்றில் புதன்கிழமை நேரிட்ட வெடி விபத்தில் 5 தொழிலாளர்கள் பலியாகினர். 8 பேர் காயமடைந்தனர்.
    இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
    கான்பூர் அருகேயுள்ள ஷிவ்ராஜ்பூரில் செயல்பட்டு வந்த அந்த குளிர்பதன சேமிப்புக் கிடங்கில், எரிவாயு கசிவு காரணமாக புதன்கிழமை மதியம் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில், அந்த கட்டடம் முழுவதும் இடிந்து தரைமட்டமானது. இடிபாடுகளில் சிக்கி, 5 பேர் உயிரிழந்தனர். 8 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.
    மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக தெரிகிறது. தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் ராணுவத்தினருடன் மாநில தீயணைப்புப் படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றார் அந்த அதிகாரி.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai