Enable Javscript for better performance
உ.பி. தேர்தலில் வெற்றி: மக்களவையில் மோடிக்கு பாஜக எம்.பி.க்கள் வரவேற்பு- Dinamani

சுடச்சுட

    

    உ.பி. தேர்தலில் வெற்றி: மக்களவையில் மோடிக்கு பாஜக எம்.பி.க்கள் வரவேற்பு

    By DIN  |   Published on : 16th March 2017 12:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து மக்களவையில் பாஜக எம்.பி.க்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    பிரதமர் மோடி புதன்கிழமை அவைக்குள் நுழைந்தவுடன், பாஜக எம்.பி.க்கள் அனைவரும் எழுந்து நின்று மேஜையைத் தட்டி வரவேற்றனர். இதனால், ’பாரத் நெட்' திட்டம் குறித்து பேசிக்கொண்டிருந்த தெலுங்கு தேசம் உறுப்பினர் கேசினேனி நானி தனது பேச்சை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. பாஜக உறுப்பினர்கள் சிலர் ’பாரத மாதா கீ ஜே' என்று கோஷம் எழுப்பினர். பிஜு ஜனதா தளம் உறுப்பினர் பாய்ஜெயந்த் பாண்டேவும் எழுந்து நின்று மோடியை வரவேற்றார். தெலுங்கானா ராஷ்ட்டிர சமிதி தலைவர் ஜிதேந்திர ரெட்டி, மோடியுடன் கைகுலுக்கி வாழ்த்துத் தெரிவித்தார். பின்னர் சுமார் 10 நிமிடங்கள் மோடி அவையில் இருந்தார்.
    வெளிநாட்டுத் தலைவர்கள் வாழ்த்து: பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஹொலாந்த், தொலைபேசி மூலம் மோடியைத் தொடர்பு கொண்டு பாஜகவின் வெற்றிக்கு வாழ்த்துத் தெரிவித்தார். அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீது அல் நயான், கனடா பிரதமர் ஜஸ்டின் துருதேவ், கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி உள்ளிட்டோரும் மோடியை தொடர்பு கொண்டு தேர்தல் வெற்றிக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai