சுடச்சுட

  

  உ.பி. தோல்வி எதிரொலி: காங்கிரஸ் தலைவர் ராஜ் பப்பர் பதவி விலக முடிவு

  By DIN  |   Published on : 16th March 2017 12:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  RajBabber1

  உத்தரப் பிரதேச பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியடைந்ததற்குப் பொறுப்பேற்று கட்சியின் மாநிலத் தலைவர் பதவியிலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக ராஜ் பப்பர் தெரிவித்துள்ளார்.
  மொத்தம் 403 தொகுதிகள் கொண்ட உத்தரப் பிரதேசத்துக்கு அண்மையில் தேர்தல் நடந்து முடிந்தது. நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அந்த மாநிலத் தேர்தல் முடிவுகள் சமாஜவாதி - காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்தது. குறிப்பாக, காங்கிரஸ் கட்சி 105 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 7 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
  இது அக்கட்சிக்கு தேசிய அளவில் ஏற்பட்ட பின்னடைவாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ராஜ் பப்பர், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை இதுகுறித்து கூறியதாவது:
  உத்தரப் பிரதேசத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தீவிரமாகச் செயல்பட்டது. கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, உத்தரப் பிரதேசம் மட்டுமன்றி 5 மாநிலங்களிலும் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டார்.
  உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் எனது பணிகளைத் திறம்படவே மேற்கொண்டேன். ஆனால், அவை எதுவும் போதவில்லை என்று தேர்தல் முடிவுகள் நிரூபித்துவிட்டன.
  இதற்கு கட்சியின் தேசியத் தலைவர்கள் பொறுப்பேற்க வேண்டிய அவசியமில்லை. ஓரிரு மாநிலங்களில் இத்தகைய பின்னடைவு ஏற்படுவதற்காக அவர்கள் தங்களது பொறுப்புகளைத் துறக்க வேண்டியதில்லை. பொதுவாகவே, தேசியத் தலைவர்கள் தங்களுக்கு கீழ் சில குழுக்களை அமைத்து அவற்றுக்கென சில பொறுப்புகளை வழங்குவார்கள். அவ்வாறு உத்தரப் பிரதேசத் தேர்தலுக்கான பொறுப்புகள் எனது தலைமையிலான குழுவின் வசம் இருந்தன. ஆனால், வெற்றியைத் தேடித் தர எங்கள் குழு தவறிவிட்டது. அதற்கு முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகத் தயாராக உள்ளேன் என்றார் அவர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai