சுடச்சுட

    

    ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு: இதுவரை 75 பேர் கைது: மத்திய அரசு தகவல்

    By DIN  |   Published on : 16th March 2017 01:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் 75 பேரை இதுவரை பாதுகாப்புப் படையினரும், போலீஸாரும் கைது செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    இதுகுறித்து மாநிலங்களûவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர் எழுத்துப்பூர்வமாக புதன்கிழமை அளித்த பதில்:
    உள்நாட்டில் பயங்கரவாத ஆதரவு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு இளைஞர்களை மனமாற்றம் செய்ய முயலுவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் சில பகுதிகளில் ஐ.எஸ். கொடியுடன் சிலர் பேரணியாகச் சென்றது கண்டறியப்பட்டு, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. மத்தியப் பிரதேச மாநிலம் சாஜிப்பூர் அருகே நிகழ்ந்த ரயில் குண்டுவெடிப்பில் தொடர்புடைய பயங்கரவாதியை பாதுகாப்புப் படையினர் உத்தரப் பிரதேசத்தில் சுட்டுக் கொன்றனர். அவரிடமிருந்து 8 துப்பாக்கிகள், 630 தோட்டாக்கள், ரூ.1.5 லட்சம் ரொக்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டன. பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீஸார் இணைந்து அந்தப் பயங்கரவாதியை சுட்டு வீழ்த்தியதன் மூலம் நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
    ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் 75 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் கேரளத்தில் மட்டும் 21 பேரும், தெலங்கானாவில் 16 பேரும் கைது செய்யப்பட்டனர். தமிழகத்திலிருந்து 4 பேர் இதுவரை கைதாகியுள்ளனர் என்றார் அவர்.
    என்ஐஏ விசாரணை: இதனிடையே, மத்தியப் பிரதேச ரயில் குண்டுவெடிப்பு தொடர்பாகவும், அதைத் தொடர்ந்து ஐ.எஸ். ஆதரவு பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாகவும் பதியப்பட்ட வழக்கை தேசியப் புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. அதுதொடர்பான முக்கிய ஆவணங்களை என்ஐஏ அதிகாரிகளிடம் வழங்கியுள்ளதாக உத்தரப் பிரதேச
    பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு ஐஜி அஸீம் அருண் தெரிவித்துள்ளார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai