சுடச்சுட

    

    காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

    By DIN  |   Published on : 16th March 2017 12:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குப்வாரா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் புதன்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
    இந்தச் சண்டையின்போது எதிர்பாராதவிதமாக குண்டு பாய்ந்த ஒரு சிறுமி உயிரிழந்தார். மேலும், அந்தச் சிறுமியின் சகோதரரும், காவலர் ஒருவரும் காயமடைந்தனர்.
    இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
    குப்வாரா மாவட்டம், கலாரூஸ் எனும் கிராமத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தக் கிராமத்துக்கு பாதுகாப்புப் படையினருடன் புதன்கிழமை சென்று சுற்றி வளைத்தோம். அப்போது, எங்கள் வருகையை கண்டவுடன் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர்.
    நாங்களும் அவர்களுக்கு எதிராக துப்பாக்கிச் சூடு நடத்தினோம். அப்போது, 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். எத்தனை பயங்கரவாதிகள் இருந்தனர் என்பது குறித்து சரியாகத் தெரியவில்லை. இந்தச் சண்டையின்போது அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். அவரது சகோதரரும், காவலர் ஒருவரும் காயமடைந்தனர். தற்போது மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 பயங்கரவாதிகளின் சடலங்களுக்கு அருகே இருந்த துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன என்று போலீஸார் தெரிவித்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai