Enable Javscript for better performance
சீனாவிடம் இருந்து முதல் முறையாக பெட்ரோல், டீசல் இறக்குமதி: மத்திய அரசு தகவல்- Dinamani

சுடச்சுட

    

    சீனாவிடம் இருந்து முதல் முறையாக பெட்ரோல், டீசல் இறக்குமதி: மத்திய அரசு தகவல்

    By DIN  |   Published on : 16th March 2017 12:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சீனாவிடம் இருந்து முதல் முறையாக பெட்ரோல் மற்றும் டீசல் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    இதுதொடர்பாக, மாநிலங்களவையில் கேள்வியொன்றுக்கு புதன்கிழமை எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருப்பதாவது: இந்தியாவில் கச்சா எண்ணெயின் தேவையானது, சுமார் 80 சதவீத அளவுக்கு இறக்குமதி மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது. அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயை சுத்திகரித்து, பெட்ரோல், டீசல் உற்பத்தி செய்கிறோம். நாட்டிலுள்ள சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் தயாரிக்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசலின் அளவு, உள்நாட்டுத் தேவையைவிட அதிகமாகவே இருக்கிறது. அதாவது, கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் மாதம் வரை 2.7 கோடி டன் அளவுக்கு பெட்ரோலும், 7.6 கோடி டன் அளவுக்கு டீசலும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. ஆனால், அந்த காலகட்டத்தில், பெட்ரோல், டீசலின் தேவை முறையே 1.7 கோடி டன் மற்றும் 5.7 கோடி டன்னாக இருந்தன.
    எனினும், குறிப்பிட்ட சில தேவைகளுக்காக வெளிநாடுகளில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. இந்தியாவை பொருத்தவரை, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சிங்கப்பூரில் இருந்துதான் நீண்ட காலமாக பெட்ரோல், டீசல் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், வெவ்வேறு நாடுகளில் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்யும் நோக்கில், சீனாவிடம் இருந்து 18 ஆயிரம் டன் பெட்ரோலும், 39 ஆயிரம் டன் டீசலும் நிகழ் நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai