Enable Javscript for better performance
ஜனநாயகம், தேசியவாதம் இஸ்லாமுக்கு எதிரானது: ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதி- Dinamani

சுடச்சுட

    

    ஜனநாயகம், தேசியவாதம் இஸ்லாமுக்கு எதிரானது: ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதி

    By DIN  |   Published on : 16th March 2017 01:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஜனநாயகம், தேசியவாதம் ஆகியவை இஸ்லாம் மதத்துக்கு எதிரானது; இதை எதிர்த்து போராட வேண்டும்'' என்று காஷ்மீர் போராட்டக்காரர்களுக்கு ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் புதிய தளபதி ஜாகீர் ரஷித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் தளபதியாக செயல்பட்டு வந்த பர்ஹான் வானி, பாதுகாப்புப் படையினருடன் கடந்த ஆண்டு நடைபெற்ற சண்டையில் கொல்லப்பட்டார். இதையடுத்து, அந்த பதவிக்கு ஜாகீர் ரஷித் என்பவர் அண்மையில் நியமிக்கப்பட்டார்.
    இந்நிலையில், ஜாகீர் ரஷித் பேசுவது போன்ற விடியோ ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் அவர் பேசியிருப்பதாவது:
    காஷ்மீரில் இந்தியப் படையினர் மீது போராட்டக்காரர்கள் ஏன் கற்களை வீசித் தாக்குதல் நடத்துகின்றனர் என்று இந்தியா ஆய்வு செய்ய வேண்டும். காஷ்மீரில் தேசியவாதத்தை எதிர்த்து ஏராளமான மக்கள் போரில் ஈடுபட்டிருப்பதை நான் காண்கிறேன். தேசியவாதத்துக்கு இஸ்லாம் மதத்தில் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
    ஜனநாயகம், தேசியவாதம் ஆகியவை இஸ்லாம் மதத்துக்கு எதிரானது. இதை தீவிரவாதிகளும், காஷ்மீர் போராட்டக்காரர்களும் எதிர்க்க வேண்டும். தீவிரவாதிகளும், போராட்டக்காரர்களும், இஸ்லாம் மதத்தின் புனிதத்தை காக்க நிச்சயம் போராட வேண்டும்; காஷ்மீர் விடுதலைக்காக அல்ல. காஷ்மீரில் மீண்டும் ஷரியா சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று அதில் ரஷித் குறிப்பிட்டுள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai