Enable Javscript for better performance
தமிழகத்தில் நிலுவை ரயில்வே திட்டங்கள் அமலாக்கத்தை விரைவுபடுத்த வேண்டும்: மக்களவையில் அதிமுக வலியுறுத- Dinamani

சுடச்சுட

    

    தமிழகத்தில் நிலுவை ரயில்வே திட்டங்கள் அமலாக்கத்தை விரைவுபடுத்த வேண்டும்: மக்களவையில் அதிமுக வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 16th March 2017 02:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    mp

    தமிழகத்தில் நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்களை விரைந்து நிறைவேற்ற ரயில்வே அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவையில் அதிமுக வலியுறுத்தியது.
    இது தொடர்பாக மக்களவையில் புதன்கிழமை நடைபெற்ற 2017-18-ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினர்கள் பேசியதாவது:
    ஜி.ஹரி(அரக்கோணம்): சென்னை - தூத்துக்குடி பிரத்யேக சரக்குப் போக்குவரத்து ரயில்பாதையை உருவாக்கும் வகையில், தில்லியில் இருந்து சென்னை வரையிலான வடக்கு -தெற்கு பிரத்யேக சரக்கு ரயில் பாதையை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும். தமிழகத்தில் கிழக்குக் கடற்கரை ரயில்வே திட்டத்தையும் விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    சி.மகேந்திரன் (பொள் ளாச்சி): பொள்ளாச்சி - போத்தனூர் ரயில்வே வழித்தடத்தில் அகலப் பாதையாக மாற்றும் பணியை விரைந்து முடிக்கவும், பொள்ளாச்சி - பாலக்காடு இடையேயான ரயில்வே வழித்தடத்தில் மின்மயமாக்கலை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    பொள்ளாச்சி - போத்தனூர் வழித்தடத்தில் மலுமிச்சம்பட்டியில் புதிதாக ரயில் நிலையம் திறக்கப்பட வேண்டும்.
    ஆர்.கோபாலகிருஷ்ணன் (மதுரை): மதுரை அருகே உள்ள கூடல் நகர் ரயில் நிலையத்தை துணைநகர ரயில் நிலையமாக தரம் உயர்த்த வேண்டும். அனைத்து ரயில்களும் கூடல்நகர், திருப்பரங்குன்றம், திருமங்கலம் ரயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டும்.
    மதுரை - பெங்களூரு இடையே கூடுதல் ரயில் சேவைக்கு நடவடிக்கை எடுக்கவும், மதுரை - போடி ரயில் திட்டத்தை விரைந்து செயல்படுத்தவும் ரயில்வே அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    வி.ஏழுமலை (ஆரணி): புதுச்சேரி - தாதர் சாளுக்கியா எக்ஸ்பிரஸ் ரயில் போளூரில் நின்று செல்லவும், திண்டிவனம் - செஞ்சி - திருவண்ணாமலை இடையே புதிய ரயில் பாதையை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai